கொரோன எனும் கொடிய வைரஸிற்கு எதிராக மனிதர்கள் நெருங்கி போராட முடியாத நிலை காணப்படுகின்றது.
இதனால் ரோபோக்களை பயன்படுத்த பெரும்பாலான முயற்சிகள் இடம்பெற்றுவருகின்றன.
இந்த வரிசையில் தற்போது ட்ரான் விமானங்களும் இறக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் உள்ள தொழில்நுட்ப நிறுவனம் ஒன்று செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தினைக் கொண்ட ட்ரோன் விமானத்தினை இதற்காக உருவாக்கியுள்ளனர்.
இதனைப் பயன்படுத்தி மனிதர்களில் உடல் வெப்பநிலையை அறிதல், அத்தியாவசியப் பொருட்களை வழங்குதல் மற்றும் கிருமிநாசினிகளை விசுறுதல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும்.
ஏற்கணவே கேரளா உட்பட பல்வேறு இடங்களில் லொக்டவுன் தொடர்பான நிலவரங்களை கண்காணிக்க பொலிசார் ட்ரோன் விமானங்களை பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் 60 கிலோ கிராம்கள் வரை எடையை தாங்கிச் செல்லக்கூடிய இப் புதிய ட்ரோன் விமானங்கள் கொரோனாவிற்கு எதிராக பயன்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.