சுவையான பூசணிக்காய் சப்பாத்தி செய்வது எப்படி ??

பொதுவாக பூசணிக்காயைக் கொண்டு பொரியல், வறுவல் என்று தான் சமையலுக்கு பயன்படுத்துவோம்.

ஆனால் பூசணிக்காயை கொண்டு சூப்பராக சப்பாத்தி செய்யலாம் தெரியுமா?. காலை, இரவு வேளையில் இந்த சப்பாத்தி செய்து உடலுக்கு ஆரோக்கியத்தை கொடுக்கும்.

சரி பூசணிக்காய் சப்பாத்தி எப்படி செய்யலாம் என்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:

  • துருவிய சிவப்பு பூசணிக்காய் – 2 கப்
  • கோதுமை மாவு – 3 கப்
  • எண்ணெய் – தேவையான அளவு
  • உப்பு – தேவையான அளவு

செய்முறை:

முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், துருவிய சிவப்பு பூசணியை சேர்த்து 3-5 நிமிடம் வதக்கி இறக்கவும்.

பின்னர் ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, உப்பு, வதக்கிய பூசணிக்காய் துருவல் சேர்த்து நன்கு சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைய வேண்டும்.

1/2 மணிநேரம் ஊற வைத்த பின்னர் தோசைக்கல்லை அடுப்பில் வைத்து காய்ந்ததும், பிசைந்து வைத்துள்ள மாவை சப்பாத்திகளாக உருட்டி, தேய்த்து கல்லில் போட்டு எண்ணெய் ஊற்றி முன்னும் பின்னும் வேக வைத்து எடுக்க வேண்டும்.

சுவையான பூசணிக்காய் சப்பாத்தி ரெடி.