உலக நாடுகள் பலவற்றிலும் ஆண்களின் விந்தணு எண்ணிக்கை தொடர்ந்து குறைந்துக்கொண்டே செல்வது மிகப் பெரிய பிரச்சனையாக உருவெடுக்கும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.
இதற்கு ஏற்றாற்போல் ஒவ்வொரு ஆண்டும் குழந்தையின்மை பிரச்சனை அதிகரித்துக் கொண்டே செல்கின்றது.
கடந்த 40 ஆண்டுகளில் வட அமெரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளில் வசிக்கும் ஆண்களின் விந்தணுக்களின் தரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ஆய்வுகள் எச்சரிக்கின்றன..
ஒருவர் உட்கொள்ளும் உணவு, பழக்க வழக்கங்கள் மற்றும் அன்றாட செயல்பாடுகளுடன் தொடர்புடையவை விந்தணுக்கள் உற்பத்தி.
அமெரிக்காவில் கருவுறுதல் மருத்துவமனை ஒன்றில் 99 ஆண்களிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் நொறுக்குத்தீனிகளை (ஜங்க் ஃபுட்) அதிகம் சாப்பிட்டால், விந்தணுக்களின் தரம் பலவீனம் அடைவது கண்டறியப்பட்டது.
இதற்கு என்ன காரணம்? சரிசெய்ய என்ன செய்யலாம் என்பது பற்றி தெரிந்து கொள்ள,