தூரத்திலிருந்து தாயைப் பார்த்து கதறிய 3 வயது குழந்தை…

சமீபத்தில் கொரோனா வார்டில் பணியாற்றும் தாயை பார்த்துவிட்டு பிரிய மனமில்லாமல் குழந்தை அழுத சம்பவம் உருக வைத்துள்ள நிலையில் குழந்தை தாயிடம் சேர்ந்துள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது.

கர்நாடகா மாநிலம் பெலகாவி மாவட்டம் பால்கா என்ற கிராமத்தை சேர்ந்தவர் சுனந்தா (31). இவர் அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறார். இவருக்கு 3 வயதில் ஐஸ்வர்யா என்ற பெண் குழந்தை உள்ளது.

தற்போது அவர் பணியாற்றும் தனியார் மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா வார்டில் சுனந்தா வேலை பார்த்து வந்ததால், தன்னால் தனது குழந்தைக்கு தொற்று பாதித்துவிடக்கூடாது என்பதற்காக மருத்துவமனை ஏற்பாடு செய்து கொடுத்த அறையில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டிருந்தார்.

சமீபத்தில் தனது மகளைக் கையில் தூக்க முடியாமல் தூரத்திலிருந்து அழுத சுனந்தா தற்போது 20 நாட்களுக்கு பின்பு தனக்கு கொரோனா தொற்று இல்லை என்று உறுதிப்படுத்திக்கொண்டு வீட்டிற்கு வந்துள்ளார்.

வீட்டிற்கு வரும் வழியிலேயே அவரைக் கணட 3 வயது மகள் அவரைக் கட்டியணைத்து அவரது கண்ணீரை துடித்துள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது.