பிக்பாஸ் நிகழ்ச்சி பலரையும் ஈர்த்த ஒன்று. தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் என பல மொழிகளில் இந்நிகழ்ச்சி எடுக்கப்பட்டு வந்தது.
ஹிந்தியின் பிக்பாஸ் சிசன் 7 ல் போட்டியாளராக கலந்து கொண்டவர் நடிகை அஜாஸ் கான். அண்மையில் அவர் எறும்பு செத்தாலும் முஸ்லீம்கள் பொருப்பா? யானை செத்தாலும், டெல்லியில் பூகம்பம் வந்தாலும் முஸ்லீம்கள் தான் பொருப்பா?
எல்லா சம்பவங்களுக்கும் முஸ்லீம்கள் தான் காரணமா? என பாஜக வை சாடும் விதமாகவும், மகாராஷ்ட்ரா முதல்வர் உத்தவ் தாக்ரே மற்றும் அவரின் மகன் ஆதித்யா தாக்ரே ஆகியோரை தாக்கியும் பேசி வீடியோ வெளியிட்டுள்ளார்.
இது சர்ச்சையாகி அவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே அவர் கடந்த வருடம் ஜூன் மாதம் டிக்டாக்கில் இது போல வீடியோ சர்ச்சையில் சிக்கி கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.