லாக்டவுன் காரணமாக பிரபலங்கள் பலரும் தங்களது அன்றாட நடவடிக்கைகளை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். டிக் டாக் செய்வது, டான்ஸ் வீடியோ, சமையல் என பிரபலங்கள் பகிரும் வீடியோ செம வைரலாகி வருகிறது.
அந்த வகையில், நடிகை சாயீஷாவின் அம்மா ஆர்யா – சாயீஷா இருவரும் கப் கேக்குடன் இருக்கும் புகைப்படத்தினை ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து இந்த கப் கேக்கை விட நீங்கள் இனிமையானவர்கள் என்று பதிவிட்டுள்ளார்.
குறித்த புகைப்படம் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.
இதற்கு பதலளித்த நடிகர் ஆர்யா, நான் எல்லாத்தையும் சாப்பிட்டேன். சீட் டே. நன்றி மனைவி.
அடுத்ததற்காக வெயிட் பண்றேன் என்று கமெண்ட் செய்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் கொரோனா காலத்தை இப்படிதான் மிகவும் சிறப்பாக இவர்கள் போக்குவதாக கூறி புகைப்படத்தினை வைரலாக்கி வருகின்றனர்.
‘You’re sweeter than the cupcakes’@sayyeshaa @arya_offl #love♥️ pic.twitter.com/ORAdVnXp7e
— Shaheen (@ShhaheenAhmeed) April 19, 2020