இந்த உலகம் முழுவதும் கரோனா வைரஸின் தாக்கமானது கடுமையான அளவு அதிகரித்துள்ளது. இதனால் தினமும் பெரும் உயிரிழப்பு ஏற்பட்டு வருகிறது. உலக நாடுகளில் மருத்துவ துறைகளில் சிறந்து விளங்கிய நாடுகள் கரோனாவின் கோரப்பிடியில் சிக்கியுள்ளது.
சீன நாட்டில் உள்ள ஹூபேய் மாகாணத்தின் யூகான் நகரில் இருந்து பரவத்துவங்கிய கரோனா வைரஸின் தாக்கமானது உலக நாடுகளையே அதிர வைத்துள்ளது. தினமும் தொடர்ந்து அதிகரித்து வரும் பலி எண்ணிக்கையும் பெரும் அச்சத்தை மக்களிடையே ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்கா கரோனா வைரஸின் தாக்கத்தால் பெரும் இழப்பை சந்திக்கும் என்று அமெரிக்கா அதிபர் முன்னதாகவே தெரிவித்திருந்த நிலையில், அந்நாட்டில் தினமும் ஆயிரத்திற்கும் அதிகமானோர் பரிதாபமாக பலியாகி வருகின்றனர்.
உலகளவில் கரோனா வைரஸின் தாக்கத்திற்கு 2,406,905 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 165,059 பேர் பலியாகியுள்ளனர். 617,013 பேர் பூரண நலன் பெற்று இல்லங்களுக்கு திரும்பியுள்ளனர். இந்த நிலையில், அமெரிக்காவில் நேற்று ஒரேநாளில் 1,539 பேர் பலியாகியுள்ளனர். மேலும், நேற்று ஒரேநாளில் 25,040 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தொடர்ந்து மக்களை பரிதாபமாக பறிகொடுத்து வரும் அமெரிக்காவில் தற்போது வரை 40,553 பேர் பலியாகியுள்ளனர். ஐக்கிய ஐரோப்பிய நாட்டில் 120,067 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று ஒரேநாளில் 596 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 16,060 ஆக உயர்ந்துள்ளது.