ஜப்பான் நாட்டில் இருக்கும் கிழக்கு கடற்கரை பகுதியை மையமாக வைத்து சக்திவாய்ந்த நிலநடுக்கமானது ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் பசுபிக் பெருங்கடலில் இருக்கும் ஹோன்ஷூ தீவு பகுதி வரை உணரப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கமானது பசுபிக் பெருங்கடலில் 41 கிமீ ஆழத்தில் மையம் கொண்டு ஏற்பட்டதாகவும், இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக அதிகரித்து இருப்பதாகவும் அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் அங்குள்ள கட்டிடங்களை பயங்கரமாக குலுக்கிய நிலையில், அதிர்ச்சியான பொதுமக்கள் பெரும் பீதிகளுக்கு உள்ளாகி வீதிகளில் தஞ்சம் புகுந்தனர். மேலும், பாதிப்பு விபரம் குறித்த முழு தகவல் வெளியாகவில்லை. இந்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை ஏதும் வெளியாகவில்லை.
6.4 magnitude #earthquake. 34 km from Ōfunato, Iwate, #Japan https://t.co/SA1mdET3AO
— Japan Earthquakes (@QuakesJapan) April 19, 2020