அஜித் நேர்கொண்ட பார்வை படத்தின் வெற்றியை தொடர்ந்து வினோத் இயக்கத்தில் இரண்டாம் முறையாக வலிமை படத்தின் மூலம் இணைந்து நடித்து வந்தார். இப்படத்தின் படப்பிடிப்புகள் ஹைதராபாத்தில் நடைபெற்று வந்தது.
கொரானாவால் படப்பிடிப்பு நின்றுவிட்டன. இந்நிலையில் அஜித் ஹைதராபாத்திலிருந்து சென்னை வந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. விமான டிக்கெட்டுகளை ரத்து செய்யச்சொல்லிவிட்டு தான் swanky bike ல் சென்னை போவதாக கூறியுள்ளார். அவரின் உடமைகளையும், எரிபொருள் செலவுகளையும் அவரின் உதவியாளரை பார்த்துக்கொள்ள சொல்லிவிட்டாராம்.
ஒரு பைக் பிரியராக அவர் நீண்ட தூரம் வந்ததோடு அவர் தன்னுடைய Garage ல் பல விலைமதிப்புடைய கருவிகளை வைத்திருந்தாராம்.
அந்த புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன.