சூர்யா எப்போதுமே தனக்கென ஒரு ஸ்டைலை வைத்துள்ளார். அவருக்கும் சினிமாவிற்கு வந்த பின் நடிப்பு கற்றுக்கொண்டு இன்று பெரிய நடிகராகவும், அப்பா சிவக்குமாரின் சினிமா வாரிசாகவும் இடம் பிடித்துவிட்டார்.
அதே வேளையில் அகரம் ஃபவுண்டேசன் மூலம் பலருக்கும் கல்வி அளித்து வருகிறார். இது பெரும் வரவேற்பையும் ஆதரவையும் பெற்றது. அவருக்கு மற்ற துறை சார்ந்த பிரபலங்களும் ரசிகர்களாக இருக்கிறார்கள்.
கிரிக்கெட்டில் பிரபலமாகவும் சின்னத்தல என அழைக்கப்படுபவர் ரெய்னா.அவருக்கு ரஹ்மான் இசையில் சூர்யா நடித்த சில்லுனு ஒரு காதல் படத்தின் முன்பே வா பாடல் தான் மிகவும் பிடிக்கும் என கூறியுள்ளார்.
கொரோனாவால் ஊரடங்கில் வீட்டில் இருக்கும் அவர் அனைவரையும் வீட்டில் இருக்குமாறு வலியுறுத்துவதோடு பழைய நினைவுகளாக மீண்டும் மீண்டும் அப்பாடலை கேட்டு வருவதாகவும் கூறியுள்ளார்.
அவர் தான் சூர்யா ரசிகர் என்பதை அடிக்கடி ரசிகர்களுடன் சாட் செய்யும் போது குறிப்பிடுவதும் உண்டு.