கொரோனா வைரஸ் நோய் உலகளவில் மக்கள் அனைவரையும் பெரும் இன்னலுக்கு ஆளாக்கிவிட்டது. பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 23 லட்சமாக உயர, இறந்தவர்களின் எண்ணிக்கையும் 1.6 லட்சமாக உயர்ந்துள்ளது.
இந்தியாவிலும் கொரோனா வைரஸ் தாக்குதல் ஏற்பட்டுள்ளது. மக்கள் பலருக்கும் தன்னார்வலர்கள் நேரடியாக களத்திற்கு சென்று உதவி வருகின்றனர்.
கோவை சிபிஐ கட்சி சார்பாக எழுத்தாளர் சந்திர சேகர் உணவில்லாமல் வாடும் வெளிமாநில தொழிலர்களுக்கு உதவி செய்து வருகிறார். அப்படியாக தன் மகள் ஜீவாவுடன் இணைந்து உணவு கொடுக்க சென்ற போது ஒடிசா பெண் ஒருவர் பிரசவ வலியால் துடித்துள்ளார்.
ஆம்புலன்ஸ் வர தாமதமாக அப்பெண்ணின் குழந்தை வெளியே வர தொடங்கியது. பின் எழுத்தாளர் சந்திரசேகர் அப்பெண்ணுக்கு பிரசவம் பார்த்துள்ளார்.
பின் வந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள் தொப்புள் கொடியை வெட்டி குழந்தைக்கும், தாய்க்கும் தேவையான மருத்துவம் செய்துள்ளனர். இதனை பெருமையாக ஜீவா தன் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
நிறைய விருதுகளை அள்ளிய விசாரணை படம். லாக்கப் என்ற நாவலை அடிப்படையாக கொண்டு அப்படம் எடுக்கப்பட்டது. இதை எழுதியவர் சந்திர சேகர் என்பது குறிப்பிடத்தக்கது.