சினிமா நடிகர்களின் படங்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு இருக்கும். படம் ரிலீஸ் என்றாலே திருவிழா போல தான். முதல் நாள் காட்சிகளுக்கு மிகுந்த டிக்கெட் தட்டுப்பாடு நிலவுவதுண்டு. அதே வேளையில் உலகளவில் அவர்களுக்கும் பெரும் மார்க்கெட் இருப்பதுண்டு.
தமிழ் சினிமா அஜித், விஜய், ரஜினி போல தெலுங்கு சினிமாவின் பிரபல நடிகர் மகேஷ் பாபுவுக்கும் இப்படியான ஒரு மார்க்கெட் இருக்கிறது.
இணையதளமான Youtube ல் ஏற்கனவே இவர்களின் பாடல்கள் பெரும் சாதனைகள் படைப்பதுண்டு. இவர்களை தவிர மற்ற நடிகர்களின் பாடல்களும் சாதனையில் உச்சத்தில் இருக்கின்றன.
இவர்களின் படங்களின் Youtube ல் வெளியாவதுண்டு. ஆனால் இவ்விசயத்தில் இதுவரை எந்த ஹீரோவும் செய்யாத சாதனையை மகேஷ் பாபு படைத்துள்ளார்.
கடந்த 2015 ல் அவரின் நடிப்பில் வெளியான Srimanthudu படம் தற்போது 100 மில்லியன் பார்வைகளை பெற்று சாதனை படைத்துள்ளது.