இணைய ஜாம்பவான் ஆன கூகுள் நிறுவனம் தனது இணைய உலாவியான குரோமினை பயன்படுத்தும் பயனர்களுக்கு எச்சரிக்கை ஒன்றினை விடுத்துள்ளது.
இதன்படி ஏற்கணவே காணப்பட்டுள்ள பாதுகாப்பு குறைபாடு ஒன்றினை நிவர்த்தி செய்து புதிய பதிப்பினை வெளியிட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
அதாவது 81.0.4044.113 என்ற புதிய பதிப்பில் இக் குறைபாடு நிவர்த்தி செய்துள்ளதாகும், இதற்காகவே குறித்த புதிய பதிப்பு வெளியிடப்பட்டுள்ளதாகவும் கூகுள் தெரிவித்துள்ளது.
இப் புதிய பதிப்பானது விண்டோஸ், லினக்ஸ் மற்றும் ஆப்பிளின் மக் கணினிகளுக்காக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
எனவே இப் புதிய பதிப்பினை நிறுவிக்கொள்வதன் மூலம் குறித்த பாதுகாப்பு குறைபாட்டினால் பாதிக்கப்படுவதிலிருந்து தப்பிக்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.