தற்போது உலகளவில் Zoom எனப்படும் வீடியோ கொன்பரன்ஸிங் அப்பிளிக்கேஷன் மிகவும் அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
இந்த அப்பிளிக்கேஷன் பிரபல்யமான அதே அளவிற்கு பல எதிர்மறை விமர்சனங்களையும் சந்தித்துள்ளது.
இதற்கு முக்கிய காரணம் பாதுகாப்பு குறைபாடுகளாகும்.
இதன் காரணமாக இந்திய அளவில் குறித்த அப்பிளிக்கேஷன் பயன்படுத்துவது முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளது.
இதனை அடுத்து இந்திய அரசாங்கம் வளர்ந்துவரும் தொழில்நுட்ப நிறுவனங்களிடம் ஒரு வேண்டுகோளை விடுத்துள்ளது.
அதாவது இச் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி இந்தியாவின் தொழில்நுட்பத்தினை உலக அளவிற்கு எடுத்துச் செல்லக்கூடிய வகையில் வீடியோ கொன்பரன்ஸிங் அப்பிளிக்கேஷன் ஒன்றினை உருவாக்குமாறு கேட்டுள்ளது.
வெற்றிகரமான அப்பிளிக்கேஷனை உருவாக்குபவர்களுக்கு இந்திய பெறுமதியல் ரூபா ஒரு கோடி பரிசு வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.