புதிய முயற்சியில் பேஸ்புக்..!!

முன்னிண சமூகவலைத்தளமாக பேஸ்புக் ஏற்கணவே இணையத்தளத்தில் சில ஹேம்களை உருவாக்கியிருந்தது.

இவை பயனர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தன.

இந்நிலையில் தற்போது ஹேம் அப்பிளிக்கேஷன் ஒன்றினை வெளியிடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தகவலை நியூயோர்க் ரைம்ஸ் வெளியிட்டுள்ளது.

இன்றைய தினம் அறிமுகம் செய்யப்படவுள்ள குறித்த ஹேம் ஆனது அடுத்த 18 மாதங்களுக்கு தென்கிழக்கு ஆசியா மற்றும் இலத்தீன் அமெரிக்கா என்பவற்றில் பரீட்சிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீடியோ ஹேம் வியாபாரத்தில் காலடி பதிக்கும் முகமாகவே இம் முயற்சியில் பேஸ்புக் நிறுவனம் ஈடுபட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.