தமிழ் சினிமாவில் சிறந்த நட்சத்திர குடும்பங்களில் ஒன்றாக இருப்பவர் தான் நடிகை ராதிகா சரத்குமார்.
ராதிகா சரத்குமாருக்கு தம்பதிக்கு பிறந்த மகள் தான் ரயன். இவர் கிரிக்கெட் வீரர் அபிமன்யு என்பவரை கடந்த 2016-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.
இதையடுத்து அவர்களுக்கு கடந்த 2018-ம் ஆண்டு ஆண் குழந்தை பிறந்தது. இதனால் ஒட்டு மொத்த குடும்பமும் மகிழ்ச்சியில் மூழ்கியது.
அதன் பின்னர் சமீபத்தில், தனது மகளுக்கு அம்மாவின் பெயர் போன்றே “ராத்யா மிதுன்” என பெயர் சூட்டி மகிழ்ந்துள்ளார் ரயன்.
இந்நிலையில், தற்போது தன் பேதியை ராதிகா – சரத்குமார் இருவரும் கொஞ்சுவது போன்ற கேண்டிட் கேப்ஷன் புகைப்படத்தை ரயன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தீயாய் பரவி வருகிறது.