முன்னணி மின் வணிக நிறுவனமான அலிபாக கிளவுட் கணினி சேவையில் முதலீட்டினை மேற்கொள்ளவுள்ளது.
இதற்காக அடுத்த 3 ஆண்டுகளில் சுமார் 28 பில்லியன் டொலர்களை ஒதுக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது.
கிளவுட் உட்கட்டமைப்பு உட்பட பணிச்செயல் முறைமை, சேவை வழங்குனர்கள், சிப்ஸ் மற்றும் வலையமைப்பு போன்ற தொழில்நுட்பங்களுக்காக இத் தொகை ஒதுக்கப்பட்டுள்ளது.
மேலும் இதற்கான தாமாக உருவாக்கிய தொழில்நுட்பங்களை அலிபாபா பயன்படுத்தவுள்ளது.
முன்னணி கிளவுட் சேவை வழங்குனரான அலிபாக ஆசியா பசிபிக் உட்பட மேலும் 3 பிரதேசங்களை உள்ளடக்கியதாக 63 டேட்டா சென்டர்களை தற்போது கொண்டுள்ளது.
இவற்றில் இந்தியாவில் மாத்திரம் இரண்டு வலயங்கள் காணப்படுகின்றன.