Samsung Galaxy Fold 2 தொடர்பான தகவல்கள் வெளியாகின

கடந்த வருடம் அறிமுகம் செய்யப்பட்ட மடிக்கக்கூடிய திரையினைக் கொண்ட Samsung Galaxy Fold கைப்பேசியானது மக்கள் மத்தியில் பலத்த வரவேற்பினைப் பெற்றிருந்தது.

இந்நிலையில் இவ் வருடமும் Galaxy Fold 2 எனும் மற்றுமொரு மொடலை அறிமுகம் செய்வதற்கு தயாராகியுள்ளது சாம்சுங் நிறுவனம்.

விரைவில் விற்பனைக்கு வரவுள்ள இக் கைப்பேசியின் சில சிறப்பம்சங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.

இதன்படி இதன் பிரதான திரையானது 7.59 அங்குல அளவு, 2213 x 1689 Pixel Resolution உடையதாக காணப்படுகின்றது.

மடிக்கப்பட்ட பின்னரான திரையின் அளவு 6.23 அங்குல அளவு, 2267 x 819 Pixel Resolution உடையதாக இருக்கின்றது.

தவிர திரையானது Ultra Thin Glass (UTG) தொழில்நுட்பத்தினைக் கொண்டுள்ளது.

அதாவது கண்ணாடியிலான திரையின் மீது பிளாஸ்டிக்கினால் ஆன பாதுகாப்பு கவசம் தரப்பட்டுள்ளது.

இக் கைப்பேசியானது 256GB, 512GB ஆகிய சேமிப்பு நினைவகங்களை உடையதாக அறிமுகம் செய்யப்படவுள்ளது.

இவற்றில் 512GB சேமிப்பு நினைவகத்தினை உடைய கைப்பேசியின் விலையானது 1,980 அமெரிக்க டொலர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.