தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரங்களான நடிகர் விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர்.
மாநகரம் மற்றும் கைதி உள்ளிட்ட வெற்றி திரைப்படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இப்படத்தை இயக்கியுள்ளார்.
இம்மாதம் வெளியவிருந்த மாஸ்டர் திரைப்படம் கொரோனா காரணத்தினால் தள்ளிப்போனது. ஊரடங்கு முடிந்த பின் இப்படம் எப்போது வெளியாகும் என தெரியவரும்.
இந்நிலையில் ரசிகர்கள் அனைவரும் டீஸர் ட்ரைலர் அப்டேட்க்குகாக காத்து கொண்டிருந்த நிலையில் தற்போது புதிதாக ஒரு அப்டேட் வந்துள்ளது.
அது என்னவென்றால் மாஸ்டர் திரைப்படம் திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தியிலும் வெளியாகும் என அறிவிக்க பட்டுள்ளது.