நடிக்கும்போது டேட்டூவை யாருக்கும் தெரியாமல் மறைக்கும் சீரியல் நடிகை சித்ரா..

தொலைக்காட்சி மூலம் பல பிரபலங்கள் சினிமாத்துறையில் அறிமுகமாகி இருக்கும் நிலையில் பிரபல தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளினியாக அறிமுகமாகி பிரபலமானவர் தான் நடிகை சித்ரா. சிறிய நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி அதன்பின் முன்னணி தொலைக்காட்சியில் பணியாற்றினார்.

அதன்பின் பிரபல தொலைக்காட்சியில் சீரியல்களிலும் நடிக்க ஆரம்பித்தார். அதன்பின் கடந்த 2018ல் ஆரம்பிக்கப்பட்ட பாண்டியன் ஸ்டோர் என்ற சீரியலில் முல்லை என்ற கதாபாத்திரத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

இந்நிலையில் சீரியலில் நடிக்கும் போது தன் கையில் வரையப்பட்ட டாட்டூவை மறைத்துக்கோண்டுதான் நடிப்பதாக தகவல் வெளியானது. இதற்கு காரணம் ஆர்ஜே மற்றும் விஜேவாக இருந்து தொலைக்காட்சிகளில் பணியாற்றியதால் கையில் மைக்கின் உருவத்தை டேட்டூவாக வரைந்துள்ளார் என்று அவரே கூறியுள்ளார்.