ஜோதிகா தமிழ் சினிமா கொண்டாடும் நடிகை. இவர் நல்ல பீக்கில் இருக்கும் போதே நடிகர் சூர்யாவை திருமணம் செய்துக்கொண்டார்.
அதை தொடர்ந்து 8 வருடங்கள் கழித்து மீண்டும் ஜோதிகா நடிக்க வந்தார், அவர் நடிக்க வந்ததில் இருந்து மிகவும் கவனமாக படங்களை தேர்ந்தெடுத்து நடிக்கின்றார்.
இதில் இவர் ராட்சசஸி படத்திற்காக விருது ஒன்றை வாங்கினார், அந்த விருது பெற்று அவர் பேசியது தான் சர்ச்சை ஆகியுள்ளது.
இதில் இவர் கோவில்களுக்கு நிறைய பணம் தருகிறார்கள், அதில் கொஞ்சம் பள்ளிகள் கட்டுவதற்கும், மருத்துவமனைகள் கட்டவும் கொடுங்கள் என்று கூறினார், அது பெரும் சர்ச்சையாகியுள்ளது.