நடிச்சது ஒரே படம் ஆனால் ரூ 5 லட்சம் நிதியுதவி! மக்களுக்காக அள்ளிக் கொடுத்த நடிகை

கொரோனா உலகம் முழுக்க தீவிரமடைந்துள்ளது. இதனால் பாதிக்கப்பட்டு இறந்தோரின் எண்ணிக்கை 1.77 லட்சமாக அதிகரித்துள்ளது. இந்தியாவிலும் 19 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 640 பேர் இறந்துள்ளனர்.

சினிமா தொழிலும் பாதிக்கப்பட்டுள்ளது. படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுள்ளன. சினிமா தொழிலாளர்களும் மிக சிரமத்திற்கு ஆளாகியுள்ளார்கள். இதனால் சினிமா பிரபலங்கள் பலரும் அவர்களுக்கு உதவி வருகிறார்கள்.

தமிழ் சினிமாவில் அஜித், சிவகார்த்திகேயன், ரஜினி, நயன்தாரா, ராகவா லாரன்ஸ் என பலரும் உதவி வந்தனர்.

இந்நிலையில் ஹிந்தி சினிமா நடிகை கங்கனா ரணாவத் தமிழ் சினிமா நாள் கூலி ஊழியர்களுக்கான அமைப்பான ஃபெப்சிக்கு ரூ 5 லட்சம் நன்கொடை அளித்துள்ளார்.

தமிழில் ஜெயம் ரவி நடித்த தாம் தூம் படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். இதுவே இவரின் அறிமுக படமும், இதுவரை இவர் நடித்த ஒரே படம் தமிழில் என்றும் சொல்லலாம்.

இரண்டாவது படமாக ஏ.எல்.விஜய் இயக்கத்தில் அவர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படமான தலைவி படத்தில் நடித்துள்ளார். இப்படம் ரிலீஸ்க்கு தயாராகவுள்ளது.

ஹிந்தி சினிமா நடிகை தமிழ் சினிமாவுக்கு இவ்வளவு தொகை கொடுத்திருப்பது பலரையும் பாராட்ட வைத்துள்ளது.