சினிமா பிரபலங்களின் திருமணங்கள் என்றாலே அனைவரும் எதிர்பார்க்கும் ஒன்று தான். ஆனால் சில நேரத்தில் எதிர்பாராத நிகழ்வுகள் நடைபெறுவது அதிர்ச்சி தரக்கூடியதாக இருக்கும்.
கன்னட சினிமாவை சேர்ந்த பிரபல நடிகர் ராஜ் தீபக் ஷெட்டி. இவர் பஞ்சதந்திரா, பர்ஜரி, கோடி கொப்பா 3 என 30 க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார்.
அவருக்கும் கர்நாடக மாநிலம் மங்களூருவை சேர்ந்த சோனியா ரோட்ரிக்ஸ் என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது.
மேலும் வரும் மே மாதம் 17 ம் தேதி திருமணம் நடத்தவும் திட்டமிடப்பட்டது. ஆனால் கொரோனாவால் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனால் சமூக இடைவெளியையும், நோய் தொற்று பரவாமல் தடுக்க நடிகர் ராஜ் தீபக் தன் திருமணத்தை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்துள்ளாராம்.