வாயை மூடி பேசவும் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகி, மணிரத்னம் இயக்கத்தில் வந்த ஓ காதல் கண்மணி படத்தின் மூலம் காதல் நாயகனாக அனைவரையும் ஈர்த்தவர் நடிகர் துல்கர் சல்மான்.
அண்மையில் அவரின் நடிப்பில் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படம் வெளியாகி வெற்றிபெற்றது.
மலையாளத்தில் அவர் நடித்த வரனே அவஷ்யமுண்டு படம் கடந்த ஃபிப்ரவரி மாதம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதில் ஷோபனா, சுரேஷ் கோபிம் கல்யாணி பிரியதர்சன் என பலர் நடிக்க படம் நல்ல வசூல் செய்தது.
இப்படம் தற்போது இணையதளத்திலும் வெளியிடப்பட்டுள்ளது. இப்படத்தை பார்த்த நிரூபர் சேத்னா கபூர் தன்னுடைய போட்டோவை தன் அனுமதியில்லாமல் படத்தில் பயன்படுத்தியதோடு உருவ கேலி செய்துள்ளதாகவும், இதற்கு மன்னிப்பு கேட்கவில்லை என்றால் வழக்கு தொடர்வேன் என பதிவிட்டுள்ளார்.
இதற்கு துல்கர் சல்மான் போட்டோ பயன்படுத்தப்பட்டது பற்றி விசாரிக்கிறோம், எந்த உள்நோக்கம் கொண்டும் இப்படம் பயன்படுத்தப்படவில்லை. சங்கடமான நிலைக்கு வருந்துகிறோம் என பதிவிட்டுள்ளார்.
Dear @dulQuer @DQsWayfarerFilm
Thank you for the feature in your film but I’d like you to excuse me from body-shaming on a public forum. The concerned image was used without my consent & knowledge in your film. I’d like to claim ownership of the same. #VaraneAvashyamund pic.twitter.com/UnDYoDOc3B— Chetna Kapoor (@chetnak92) April 20, 2020