தமிழ் சினிமாவில் வின்னைத்தாண்டி வருவாயா போன்ற படங்களில் சிறுகதாபாத்திரத்தில் நடித்து பின் அடுத்தடுத்த படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை சமந்தா. முன்னணி நடிகர்கள் படத்தில்கமிட்டாகி ரசிகர்களின் கனவுக்கன்னியாகவும் இருந்து வருகிறார்.
சில ஆண்டுகளுக்கு முன் நடிகை நாக சைத்தன்யாவை திருமணம் செய்து வாழ்ந்து வருகிறார். திருமணத்திற்கு பிறகு சமந்தாவில் சினிமா வாழ்க்கை இல்லை என்று கூறிய நிலையில் மீண்டும் படங்களில் கமிட்டாகி நடிக்க ஆரம்பித்தார். சமுகவலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வந்த சமந்தா சில வாரங்களாக இணையத்திற்கு வருவதை தவிர்த்து வந்துள்ளார்.
இந்நிலையில் சமந்தா வளர்த்து வரும் செல்லபிராணி நாயை கட்டிபிடித்து தூங்கியவாறு எடுத்துக்கொண்ட புகைப்படத்தோடு நீண்ட தூக்கத்திற்கு பிறகு வந்துவிட்டேன் என்று பதிவிட்டுள்ளார். இனி இன்ஸ்டாவில் தினமும் வருவதை தொடர்வார் என்று ரசிகர்களுக்கு மறைமுகமான கேள்வியை அவரது ஸ்டோரியில் குறிப்பிடுள்ளார் சமந்தா.