வவுனியா ஈச்சங்குளம் பகுதியில் 35லீட்டர் கசிப்புடன் ஒருவர் கைது!

வவுனியா ஈச்சங்குளம் பகுதியில் கசிப்பு  காய்ச்சும் நடவடிக்கை முறியடிக்கப்பட்டுள்ளதுடன் குறித்த நடவடிக்கையில் ஈடுபட்ட நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக, வன்னி மாவட்ட பிரதிபொலிஸ்மா அதிபரின் கீழ் செயற்படும் விசேட போதை ஒழிப்பு பிரிவினர் தெரிவித்தனர்.

இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது. இன்றையதினம் மதியம் பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய ஈச்ச்சங்குளம் காட்டுப்பகுதியை முற்றுகையிட்ட பொலிசார் 35லீட்டர் கசிப்பினை கைப்பற்றியுள்ளதுடன், அதனை உற்பத்தி செய்வதற்கு பயன்படும் 405000ml கோடா மற்றும் பெரல்களையும் கைப்பற்றியுள்ளனர்.

அதனை காய்ச்சும் நடவடிக்கையில் ஈடுபட்டார் என்ற குற்றசாட்டின் அடிப்படையில் வவுனியா சுந்தரபுரம் பகுதியை சேர்ந்த நபர் ஒருவரையும் பொலிசார் கைதுசெய்துள்ளதாக தெரிவித்தனர்.

குறித்த கைதுநடவடிக்கை வன்னிமாவட்ட பிரதிபொலிஸ்மா அதிபர் தம்மிக்க பிரியந்தவின் வழிகாட்டலில், உப பொலிஸ் பரிசோதகர்களான சுபசிங்க, மாரசிங்க, அமரசூரிய, பொலிஸ் சார்ஜன்ட்களான ஜெயந்த, கருணாரத்தின, சுரேஸ் ,கான்ஸ்டபிள்களான பிரசன்ன, லலித், சபீகரா, பிரசாந்தன், நளிந்த ஆகியோரை கொண்ட பொலிஸ் குழுவினரால் முன்னெடுக்கப்பட்டது.

கைதுசெய்யபட்டவர் நாளைய தினம் நீதி மன்றில் ஆஜர்படுத்தபடவுள்ளதாக பொலிசார் மேலும் தெரிவித்தனர்.