நடிகை அமலா பாலின் 2வது திருமணம் பற்றிய விவாதங்கள் சமூக வலைதளங்களில் இன்னும் தொடர்ந்து கொண்டே தான் இருக்கின்றன. ஏ.எல்.விஜய் உடனான முதல் திருமணம் தோல்வியில் முடிந்ததை அடுத்து, வேறு ஒருவரை காதலித்து வருவதாக ஆடை பட ரிலீஸ் சமயத்தில் அமலா பால் தெரிவித்திருந்தார்.
மும்பையை சேர்ந்த பாடகர் பவனிந்தர் சிங்கை தான் அமலா காதலிப்பதாக பேசப்பட்டது. இதை மெய்யாக்கும் வகையில் சமீபத்தில் அமலா பாலும், பவனிந்தர் சிங்கும் திருமணக் கோலத்தில் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. ஆனால், தான் மறுமணம் செய்து கொள்ளவில்லை என அமலாபால் மறுப்பு அளித்திருந்தார்.
இந்நிலையில், அமலா பால் தனது டுவிட்டர் பக்கத்தில், “நீங்கள் தான் உங்களுடைய இரட்டைச் சுடர், பாதுகாவலர், ஆத்ம துணை, அன்பானவர், நம்பிக்கையின் புதிய சக்தி, சுதந்திர மத்திரம், நபிகள், புத்தர், ஆன்மிக வழிகாட்டி, தெய்வீக இணை, ஹீரோ மற்றும் ஹீலர் என்பதை அறியும்போது எவ்வளவு மயக்கம் அளிக்கிறது” எனும் சிறுகதை எழுத்தாளர் ரூன் லஸுலியின் வரிகளை பதிவிட்டுள்ளார்.
அமலா பாலின் இந்த வரிகள், அவர் எந்த ரிலேஷன்சிப்பிலும் இல்லை, நமக்கு நாமே தான் எல்லாமும் என்பதை மறைமுகமாக கூறுவதாக ரசிகர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.
இதை பார்த்த நெட்டிசன்கள், அமலா பால் தனது காதலர் பற்றியும், இரண்டாம் திருமணத்தை பற்றியும் தான் சூசகமாக பதிவிட்டுள்ளார் என கமெண்ட் செய்துள்ளனர்.