நடிகை சாய் பல்லவி தற்போது தென்னிந்திய அளவில் மிகவும் பிரபலமான நடிகையாக இருப்பவர், இவரின் திரைப்படங்களில் வரும் பாடல்களில் இவர் நடனமாடுவதை காணவே பல ரசிகர்கள் உள்ளனர்.
இவர் கடைசியாக சூர்யா நடிப்பில் சென்ற வருடம் வெளியான என்.ஜி.கே திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். மேலும் தற்போது சாய் பல்லவி தெலுங்கு திரைப்படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.
இந்நிலையில் சாய் பல்லவி மட்டும் அவரின் பெற்றோர்களும் சென்ற வருடம் ஹலிதா ஷமீம் இயக்கத்தில் வெளியான சில்லு கருப்பட்டி திரைப்படத்தை பார்த்துவிட்டு மிகவும் எமோஷனால் ஆகிவிட்டார்களாம்.
மேலும் சாய் பல்லவி இயக்குனர் ஹலிதாவிற்கு மெசேஜ் மூலம் வாழ்த்தை தெரிவித்து, மேலும் இதுபோல சிறந்த திரைப்படங்களை இயக்க வேண்டுகோள் விடுத்துள்ளார். இத்தனை ஹலிதா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.