தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான நடிகர்கள் விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர். இப்படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிந்து திரைக்கு வர தயாராகவுள்ளது.
நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள மாஸ்டர் திரைப்படம், இம்மாதம் வெளியாகவிருந்த நிலையில் கொரோன காரணத்தினால் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
மேலும் அனிருத்தின் இசையில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படத்தின் பாடல்கள் அனைத்தும் ரசிகர்களின் பேராதரவை பெற்றதோடு, இணையதளங்களில் பல்வேறு சாதனைகளை செய்து வருகிறது.
அந்த வகையில் மாஸ்டர் திரைப்படத்தின் பாடல்கள் டிக் டாக்கில், இதுவரை 1500 மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளது. இந்த இமாலய சாதனையை படக்குழுவினர்கள் மற்றும் ரசிகர்கள் இணையதளத்தில் கொண்டாடி வருகின்றனர்.