கேட்காமலேயே அள்ளிக்கொடுத்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்

கொரோனாவால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு கடந்த 25 நாட்களுக்கு மேலாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனால் பல ஏழை எளிய மக்களின் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

அரசும் மக்களை கவனமாக இருக்குமாறும், சுகாதார நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தி வருகிறது. தன்னார்வலர்கள் நிறைய மக்களுக்கு உதவி வருகிறார்கள்.

சினிமாவில் வேலையை இழந்து வறுமை உணவுக்காக அல்லல்படும் பலருக்கு சினிமா பிரபலங்கள் உதவியளித்துள்ளார்கள்.

தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உதவி இயக்குனர்களுக்கும் நலிந்த சினிமா கலைஞர்களுக்கும் கேட்காமலேயே 24 டன் எடை கொண்ட அத்தியாவசிய பொருட்களை அனுப்பி வைத்துள்ளார்.

கேட்காமலேயே அவர் செய்த இந்த உதவிக்கு இயக்குனர்கள் சங்கம் வாழ்த்து தெரிவித்துள்ளது.