தமிழ் சினிமாவில் 80, 90 களில் கொடிக்கட்டி பறந்தவர் தான் நடிகை மீனா. தன்னுடைய சிறுவயதில் நடிகர் சிவாஜி கணேசனின் நெஞ்சங்கள் படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகினா. நடிகர் ரஜினிகாந்தின் அன்புள்ள ரஜினிகாந்த் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து எஜமான், முத்து, வீரா போன்ற படங்களில் அவருக்கே கதாநாயகியாக நடித்து பிரபலமானவர் நடிகை மீனா.
அதன்பின் அடுத்தடுத்த முன்னணி நடிகர்கள் படத்திலும் நடித்து புகழும் விருதுகளும் பெற்றார். பல வருடங்களுக்கு பிறகு நடிகர் ரஜினிகாந்தின் அண்ணாத்தே படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார் மீனா.
இப்படத்திற்காக உடல் எடையை குறைத்து க்ளாமரில் இறங்கியிள்ளார். 43 வயதான மீனா தற்போது இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் அளவிற்கு போட்டோஹுட் எடுத்துள்ளார். இதை அவரது சமுகவலைத்தளத்தில் பகிர்ந்து ரசிகர்களை ஷாக்காக்கி வருகிறார்.