தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக கடந்து 20 வருடமாக பணிபுரிந்து வருபவர் திவ்யதர்ஷினி. இவரை அனைவரும் செல்லமாக டிடி என்று தான் அழைப்பார்கள்.
இவர் தொலைக்காட்சியில் ஜோடி நம்பர் 1, பாய்ஸ் vs girls, சூப்பர் சிங்கர், காபி வித் டிடி போன்ற நிகழ்ச்சிகளை முன் நின்று தொகுத்து வழங்கி வந்தார். மேலும் தற்போது ‘ஸ்பீட் கெட் செட் கோ’ என்ற விளையாட்டு நிகழ்ச்சியை இவர் தான் முன் நின்று தொகுத்து வழங்கி வருகிறார்.
இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புற்றுநோயாளிகளுக்கு உலகநாயகன் கமல் ஹாசன் ஸ்டைலில் கட்டிப்பிடி வைத்தியம் செய்துள்ளார், மற்றும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தன்னால் முடிந்த உதவியையும் செய்துள்ளார் தொகுப்பாளினி டிடி.
அதனை குறித்த தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.