சிறார்களுக்கு இணையப் பாதுகாப்பினை வழங்குவதற்கான சில டிப்ஸ்..!!

தற்போது வயது வேறுபாடு இன்றினை அனைவரும் வீட்டில் முடங்கியிருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் சிறார்கள் தமது கல்வி நோக்கத்திற்காகவும், பொழுதுபோக்கிற்காகவும் இணையத்தை பயன்படுத்துவது அதிகரித்துள்ளது.

எனவே இந்த தருணத்தில் சிறார்களின் இணையப் பாவனை தொடர்பாக அவதானம் செலுத்துவது அவசியமாகும்.

இதற்கான சில டிப்ஸ் இங்கே தரப்பட்டுள்ளது.

  • இணையத்தினால் ஏற்படும் பாதகமான விளைவுகள் பற்றி அவர்களுக்கு எடுத்துரைத்தல்
  • சிறார்கள் இணையத்தைப் பயன்படுத்தும்போது அவர்களுடன் சேர்ந்த பெற்றோரும் பயன்படுத்துதல் (Co-View, Co-Play)
  • கணினிகளில் தரப்பட்டுள்ள Parental Control மற்றும் பாதுகாப்பான தேடல் வசதிகளை பயன்படுத்துதல்.
  • சிறார்கள் தனியாக இணையத்தேடலில் ஈடுபடுவதை தவிர்த்தல்.
  • தனிப்பட்ட தகவல்களை இணையத்தில் பகிர வேண்டாம் என அறிவுறுத்துதல்.