பேஸ்புக்கில் தனி நபர் தகவல்கள் அவ்வப்போது கசிவது வழங்கமாக இருந்தது.
எனினும் சில வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற ஹேம்பிரிஜ் அனாலிட்டிக்கா சம்பவத்திற்கு பின்னர் இவ்வாறான பிரச்சினைகள் சற்று குறைந்திருந்தது.
எனினும் தற்போது தனி நபர் தகவல்கள் கசிதல் பூதாகரமாக கிளம்பியுள்ளது.
அதாவது சுமார் 309 மில்லியன் தொலைபேசி இலக்கங்கள் உட்பட ஏனைய தகவல்கள் பேஸ்புக்கில் கசிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவற்றில் 267 மில்லியன் தகவல்கள் Dark Web இல் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒரு தகவலின் பெறுமதியானது 0.0002 சதங்கள் வீதம் அனைத்து தகவல்களும் மொத்தமாக 500 பவுண்ட்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
பிரபல தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றே இந்த தகவைல வெளியிட்டுள்ளது.