எல்லை தாண்டியவர்கள் கட்டாய கொரோனா வைரஸ் தனிமைப்படுத்தலுக்குள்ளாக வேண்டும் என்று கூறப்பட்டதால், அதற்கு எதிராக போலந்தில் வசிக்கும் மற்றும் ஜேர்மனியில் பணிபுரியும் நூற்றுக்கணக்கான மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தென்மேற்கு போலந்து எல்லை நகரமான ஜ்கோர்செலெக்கில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
கொரோனா வைரஸால் எல்லைகளை மூடிய முதல் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் போலந்து ஒன்றாகும்.
அதன் பிராந்தியத்திற்குள் நுழைவோருக்கு இரண்டு வாரங்கள் கட்டாயமாக தனிமைப்படுத்தலுக்கு உத்தரவிட்டது.
போலந்து-ஜேர்மனி ஆகிய இரண்டு ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு இடையில் தங்கள் வாழ்க்கையை வாழ்ந்து வருபவர்களுக்கு இது ஒரு பெரிய அதிர்ச்சியளித்தது.
இந்நிலையில் கட்டாய தனிமைப்படுதலை எதிர்த்து ஜோகோர்செலெக் மற்றும் ஜேர்மன் நகரமான கோர்லிட்ஸ் ஆகியவற்றை இணைக்கும் பாலத்தில் நுற்றுக்கணக்கானோர் கூடி போராட்டம் நடத்தினர்.
நான் ஆறு வாரங்களாக வீட்டில் சிக்கிக்கொண்டிருக்கிறேன், எல்லையைத் தாண்ட முடியாது, வேலைக்குச் செல்ல முடியாது. என்னால் எனது மாணவர்களிடம் திரும்பிச் செல்ல முடியாது என்று ஜொர்கெலெக்கில் வசித்து வரும் கோர்லிட்ஸில் பணிபுரியும் ஆசிரியர் மிரெல்லா பிங்கிவிச் கூறினார்.
போலந்து பக்கத்தில் சுமார் 300 பேரும், ஜேர்மனியில் சுமார் 100 பேரும் சிலர் முகமூடி அணிந்த படி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மக்கள் எல்லை தாண்டுவதைத் தடுக்க பாலத்தின் நடுவில் அமைக்கப்பட்ட தற்காலிக வேலி மூலம் இரு குழுக்களும் பிரிக்கப்பட்டன.
ஜேர்மன் மற்றும் செக் குடியரசு எல்லைகளில் அமைந்துள்ள பிற போலந்து நகரங்களிலும் போராட்டங்கள் நடத்தப்பட்டன.