சினிமாவில் சாதிக்க நினைப்போர் பலருக்கும் படிக்கட்டாய் இருப்பது டிவி நிகழ்ச்சிகள் தான். இதன் மூலம் கலையுலக வாழ்வில் பலர் ஜொலித்திருக்கிறார்கள், புதுப்புது சாதனையாளர்களும் உயர்ந்துள்ளார்கள்.
அந்த வகையில் அமெரிக்காவின் புகழ் பெற்ற டிவி நிகழ்ச்சி America’s Got Talent. உலகப்புகழ் பெற்ற இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று இறுதி வரை சென்று வெளியேறியவர் Frances Lee Strong.
. 2009 ல் நடைபெற்ற அந்நிகழ்ச்சியின் நான்காம் சீசனின் பங்கெற்று டாப் 10 திறமையாளர்களில் ஒருவராக திகழ்ந்தார். காமெடியில் கலக்கி வந்தார்.
கடந்த நவம்பர் மாதம் ஃபுளோரிடாவில் தான் தங்கியிருந்த ஹோட்டல் அறையில் தவறி கிழே விழுந்து இடுப்பில் அடிபட்டதில் படுக்கையாய் போனார்.
உடல் நலம் சரியில்லாமல் இருந்தவர் ஏப்ரல் 24 ல் 85 ம் வயதில் காலமாகியுள்ளார். அவரின் மரணம் பலருக்கும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.