காவல் துறைக்கு மிக பெரிய உதவி செய்த நடிகர் யோகி பாபு!

தமிழ் திரையுலகில் தற்போது தனது கடின உழைப்பினால் முன்னணி காமெடி நடிகராக வளர்ந்து இருப்பவர் நடிகர் யோகி பாபு.

இவர் சில நாட்களுக்கு முன் கொரோனாவால் அவதிப்படும் மக்களுக்கு 1250 கிலோ அரிசி மூட்டைகளை உதவும் வகையில் வழங்கினார்.

இந்நிலையில் தற்போது நமது காவல் துறை அதிகாரிகளுக்கும் மக்களுக்கும் உதவும் வகையில் கொரோனா பரவாமல் தடுக்கும் முகமூடியையும், சத்து தரும் குளிர் பானத்தையும் வழங்கியுள்ளார்.