நடிகை சமந்தா தெலுங்கு மற்றும் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக உள்ளார். தனக்கு திருமணமான பிறகும் திரைப்படங்களில் தொடர்ச்சியாக நடித்து வருகிறார்.
இந்நிலையில் நடிகை சமந்தா தற்போது மீண்டும் ஒரு ரீமேக் திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கு முன் மலையாளத்தில் வெளியான பெங்களூரு டேஸ் படத்தின் தமிழ் ரீமேக்கில் நடித்தார், அதன்பின் கன்னடத்தில் இருந்து தமிழ் மற்றும் தெலுங்கில் ரீமேக்கான யூ-டர்ன் திரைப்படத்தில் நடித்திருந்தார்.
அதனை தொடர்ந்து 96 திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடித்திருந்தார். ஆனால் இந்த திரைப்படங்கள் அனைத்தும் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை.
இதனிடையே தற்போது கன்னடத்தில் வெளியான தியா திரைப்படத்தின் தெலுங்கில் ரீமேக்கில் நடிக்க நடிகை சமந்தா ஆர்வம் காட்டுவதாக கூறப்படுகிறது.