லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் மற்றும் விஜய் சேதுபதி இணைந்து நடித்து மிக பெரிய எதிர்பார்ப்பில் உருவாகி இருக்கும் படம் மாஸ்டர்.
இப்படம் இம்மாதம் உலகமெங்கும் வெளிவர இருந்தது. ஆனால், கொரோனவால் இப்படத்தின் ரிலீஸ் தள்ளி போனது.
இதனையடுத்து இப்படம் விஜய்யின் பிறந்தநாள் ஜூன் 22ஆம் தேதி அன்று வெளிவரும் என சில தகவல்கள் அண்மையில் கசிந்திருந்தது.
ஆனால், தற்போது இப்படம் விஜய்யின் பிறந்தநாள் அன்று வெளிவராது என்று தெரியவந்துள்ளது.
இந்நிலையில் இப்படத்தில் பைனல் மிக்ஸ் இன்னும் பட குழுவினர் செய்யவில்லை என தெரியந்துள்ளது.
ஆம் பைனல் மிக்ஸ் செய்து வைத்திருந்தால் அதனை ஹாக் செய்து இணையதளத்தில் விட்டுவிடுவார்கள் என எண்ணி பட குழுவினர் பைனல் மிக்ஸ் செய்யாமல் இருக்கிறார்களாம்.