மதுரை கள்ளழகர் திருவிழா இரத்து..வெளியான தகவல்

உலகம் முழுவதும் கரோனா வைரஸின் தாக்கமானது தொடர்ந்து அதிகரித்து வந்தது. இதனால் இந்தியாவில் நாடுதழுவிய ஊரடங்கு அமலாகியுள்ள நிலையில், மக்கள் அத்தியாவசிய பணிகளை தவிர்த்து வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவில் வெகு விமர்சையாக கொண்டாடப்படும் பல திருவிழாக்கள் இரத்து செய்யப்பட்டு, கோவிலின் நிகழ்ச்சிகள் பாதுகாப்புடன் பக்தர்கள் இல்லாமல் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டது.

மதுரை மாவட்டத்தில் நடைபெறும் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் திருவிழாவானது இரத்து செய்து அறிவிக்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள மக்களால் வெகு விமர்சையாக கொண்டாடப்படும் கள்ளழகர் திருவிழாவானது தற்போது கரோனாவால் இரத்து செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கள்ளழகர் கோவில் நிர்வாகம் அறிவிக்கை வெளியிட்டுள்ளது.

மேலும், மண்டூக மகரிஷிக்கு மோட்சம் அளிக்கும் நிகழ்வானது கோவிலின் உட்பிரகாரத்தில் நடைபெறும் என்றும், மே மாதம் 8 ஆம் தேதி www.tnhrce.gov .in என்ற இணையத்தளம் மற்றும் யூடூப், முகநூல் வாயிலாக நிகழ்ச்சி நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாலை 4.30 மணிமுதல் 5 மணிவரை நேரலையில் ஒளிபரப்பு செய்யவும் கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.