பெண்களை ஏமாற்றி தொழிலதிபராக வலம்வந்த காமுகன்..!!

தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் கணேசபுரம் பகுதியை சார்ந்த 26 வயது இளைஞர் காசி. இவரது தந்தை இறைச்சி வியாபாரம் செய்து வரும் நிலையில், தந்தையின் வியாபாரத்தில் தனது உடலை வளர்த்து வந்த காமுகனின் எண்ணம் கேவலமாக இருந்துள்ளது.

இவன் முகநூலில் போலி கணக்கு துவங்கி, பல பெண்களை ஏமாற்றி வந்துள்ளான். சமூக வலைத்தளத்தில் தன்னை சமூக ஆர்வலராகவும், தொழில் அதிபராகும், ரோமியோகவும் அடையாளப்படுத்தி, கோட் சூட் புகைப்படத்துடன் புகைப்படங்களை வெளியிட்டு வந்துள்ளான்.

மேலும், இவனது புகைப்படத்தை பார்த்து மயங்கிய பெண்களிடம், பல கவிதைகளை பேசி மனதை கவர்ந்து உள்ளான். இந்த நிலையில், சென்னையை சேர்ந்த பெண் மருத்துவர் இவனிடம் ஏமார்ந்து பல லட்சக்கணக்கான பணத்தையும் கொடுத்துள்ளார். மேலும் காரையும் பறிகொடுத்துள்ளார்.

முகநூலில் காமுகன் பெண் மருத்துவருடன் இருந்த புகைப்படத்தை பதிவு செய்ததை அடுத்து, பெண் மருத்துவர் வழங்கிய புகாரின் அடிப்படையில் இவனை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

இவனிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், முகநூல் வாயிலாக பல பெண்களை ஏமாற்றி வந்ததும் தெரியவந்துள்ளது. மேலும், இவனிடம் ஏமாந்த பெண்களின் தனிமை புகைப்படத்தையும் காவல் துறையினர் கைப்பற்றியுள்ளனர். சமூக வலைத்தளத்தில் உள்ள பதிவுகளை வைத்து பெண்கள் ஏமாறும் சோகம் தொடர்ந்து அரங்கேறி வருகிறது.