மழைக்காலத்தில் மீண்டும் கொரோனா..!!

கொரோனா உலகம் முழுவதும் பல உயிர் இழப்புகளை ஏற்படுத்தி வரும் நிலையில், இந்தியாவையும் இது விட்டுவைக்கவில்லை. மேலும், ஊரடங்கு உத்தரவு அமலாகியுள்ள நிலையில், கரோனாவில் பலரும் சிக்கித் தவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், இது குறித்து விஞ்ஞானிகள் பல எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். மேலும், கரோனா வைரசின் இரண்டாவது தாக்கம் ஜூலை மாத கடைசியில் அல்லது ஆகஸ்ட் மாதத்தில் மீண்டும் வரும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள பல்கலைக்கழகத்தின் கணிதவியல் பேராசிரியர் இது குறித்து தெரிவித்த சமயத்தில், கரோனா தனது உச்சத்தை எட்டியுள்ளது. இனிமேல் இது கொஞ்சம் கொஞ்சமாக குறைய துவங்கும்.

அடுத்த சில வாரங்களில் அல்லது அடுத்த சில மாதங்களில் இது மீண்டும் தாக்கும் தன்மை கொண்டது. ஜூலை மாத இறுதியில் அல்லது ஆகஸ்ட் மாதத்தில் மழை காலம் வரும் போது இது மீண்டும் தாக்க வாய்ப்புள்ளது.

சமூக இடைவெளியை பின்பற்றுகிறோமா? என்பதைப் பொறுத்தது இது அமையும். மேலை நாடுகளில் மேற்கொண்ட ஆய்வில், கரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட நபர் மீண்டும் கரோனாவால் பாதிக்கப்படாமல் இருக்க இயலாது என்பதற்கான ஆதாரம் இல்லை. உடலில் எதிர்ப்பு சக்தி இந்த அளவிற்கு உள்ளது என்பதை பொறுத்து இது அமைகிறது என்று தெரிவித்துள்ளனர்.