கொரோனா கிருமிகளை அழிக்க நாசாவின் புதிய கண்டுப்பிடிப்பு…

இந்தியா முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 26,283 ஆக அதிகரித்துள்ள நிலையில், உயிரிழப்பு 825 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில் கிருமி நீக்கம் செய்ய பயன்படும் அம்புஸாட் (AMBUStat) என்ற கருவியை விண்கலங்களை சுத்தம் செய்யப் பயன்படுத்தலாம் என்று ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

இந்த கருவியை முதலில் பள்ளிகள், சிறைச்சாலைகள் போன்ற பொதுவான இடங்களுக்கு பயன்படுத்தலாம் என்றும் ஆலோசிக்கப்பட்டுள்ளது.

மேலும், கருவிகளைக் கொண்டு மிக எளிதாக கிருமி நீக்கம் செய்யலாம் என நாசா அமைப்பின் தலைவர் ஜிம் பிரிடென்ஸ்டைன் (Jim Bridenstine ) கூறியுள்ளார்.

கிருமிநீக்கம் செய்ய வேண்டிய அறைக்குள் இந்தக் கருவியை வைத்தால் அதிலிருந்து வெளிவரும் பனிமூட்டம் போன்ற புகை அங்குள்ள அத்தனை கிருமிகளையும் அழித்து விடும் என்று ஜிம் பிரிடென்ஸ்டைன் தெரிவித்துள்ளார்.