பாக்கிஸ்தான் நாட்டில் கரோனா வைரஸின் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பாகிஸ்தானில் கரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்தை கடந்துள்ள நிலையில், பலி எண்ணிக்கையும் 250 க்கும் அதிகமாகியுள்ளது. இதனால் அங்கு ஊரடங்கு மேலும் 2 வாரத்திற்கு நீட்டிப்பு செய்து அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கடுமையான பொருளாதார நெருக்கடி, வருமான இழப்பு போன்ற பல பிரச்சனைகளால் சிக்கி தவிக்கும் நிலையில், பொருளாதார பிரச்சனையை சரி செய்ய சர்வதேச நிதியம் நிதிஉதவி அளிக்க ஒப்புதல் வழங்கியது. இதனைப்போன்று அமெரிக்காவும் பாகிஸ்தானிற்கு உதவி செய்ய முன்வந்தது.
இந்த சமயத்தில், கரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் கப்பலிலிருந்து ஏவுகணையை ஏவி அரபிக்கடல் பகுதியில் பாக்கிஸ்தான் சோதனை நடத்தியுள்ளது. இந்த விஷயம் தொடர்பாக பேசிய கடற்படை செய்தியாளர் அர்ஷித் ஜவத் ” போர்க்கப்பல் மற்றும் ஹெலிகாப்டரில் இருந்து ஏவப்பட்டுள்ள எதிர்ப்பு ஏவுகணை கடலில் இருக்கும் இலக்கை துல்லியமாக தாக்கி அளித்தது.
இந்த ஏவுகணை அதிநவீன மற்றும் சிறந்த தொழில்நுட்பத்தோடு, வான் மின்னணுவியல் தொழில் நுட்பத்தோடு வடிவமைக்கப்பட்டுள்ளது. இது பாக்கிஸ்தான் கடற்படையின் செயல்பாடு மற்றும் இராணுவத்தின் தயார் நிலையை நிரூபிக்கும் சான்று என்றும் தெரிவித்துள்ளார். மேலும், பாக்கிஸ்தான் கடற்படை எதிரிகளின் ஆக்கிரமிப்பிற்கு தகுந்த பதிலடி கொடுக்கும் என்றும், தாய்நாட்டையும், தாய்நாட்டு நீர் நிலையையும் அது பாதுகாக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.