கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள், தாய் பால் ஊட்டலாமா என்ற கேள்வி பலருக்கு எழுந்துள்ளது.
தாய்பால் மிகவும் ஆரோக்கியமானது தான் ஆனால்,அதன் மூலம் குழந்தைக்கு கொரோனா பருவும் என்று பல தகவல்கள் வெளியாகின்றது.
உண்மையில் தாய்பாலில் கொரோனா வைரஸ் தொற்று பரவியதாக எந்த ஆதாரங்களும் நிரூபிக்கப்படவில்லை.
ஆனால், தாய்பால் ஊட்டும் போது வேறு விதமாக குழந்தைக்கு அந்த தொற்று ஏற்பட்டலாம்.
அவ்வாறு இருக்கையில், உங்கள் மருத்துவரை ஆலோசனை செய்ய வேண்டும்.
மேலும், கொரோனா தொற்று இல்லாத தாய்மார்களும் குழந்தைக்கு தாய்பால் கொடுக்கும் முன் உங்கள் கைகளை நன்றாக கழுவ வேண்டும். அதன்பின்னரே மார்பகங்களை தொடுதல் குழந்தைக்கு ஊட்டுதல் ஆகியவை மேற்கொள்வது சிறந்தது.
மேலும், தாய்பாலுடன் தொடர்புடைய அனைத்து பகுதிகளையும் தாய்மார்கள் சுத்தம் செய்வது மிகவும் அவசியமான ஒன்றாகும்.