தற்போது உலகை ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் தாக்கமானது மீண்டும் ஒரு முறை ஏற்படலாம் என ஆராய்ச்சியாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.
அப்போது ஏற்படும் விளைவானது தற்போது காணப்படும் நிலைமையை விட மோசமாக இருக்கும் என கருதுகின்றனர்.
இதனைக் கருத்திற்கொண்டு நாசா விண்வெளி ஆய்வு மையமானது அதிநவீன வென்டிலேட்டர் கருவியை உருவாக்கியுள்ளது.
கொரோனா நோயாளியின் மூச்சு திணறலை வினைத்திறனாக தடுக்கும் வகையில் இச் சாதனம் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த வார இறுதிக்குள் இச் சாதனத்தினை பயன்படுத்துவதற்கான அனுமதியை உணவு மற்றும் மருந்துக் கட்டுப்பாட்டுசபையிடமிருந்து வாங்குவதற்கு நாசா திட்டமிட்டுள்ளது.
கலிபோர்னாவில் உள்ள ஆய்வுகூடத்தில் 37 நாட்கள் முயற்சியின் விளைவாக இந்த வென்டிலேட்டர் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு VITAL (Ventilator Intervention Technology Accessible Locally) பெயரிடப்பட்டுள்ளது.