இந்தியாவில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. முதற்கட்டமாக ஏப்ரல் 14ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து மே 3 ஆம் தேதி வரை மீண்டும் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டது. இருந்தபோதும் இந்தியாவின் கொரோனா வைரஸ் பரவல் குறையவில்லை.
ஊரடங்கு உத்தரவால் அரசு தேர்வுகள் மற்றும் பொதுத் தேர்வுகள் அனைத்தும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தமிழகத்தில் பத்தாம் வகுப்பு தேர்வு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு தேர்வு நடைபெறவில்லை. ஒருசில மாநிலங்களில் மட்டும் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவித்துள்ளனர்.
இந்நிலையில் திருவண்ணாமலையில் 6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு ஆன்லைன் தேர்வு நடத்தப்படும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார். திருவண்ணாமலை மாவட்டத்தில் 6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு ஆன்லைன் தேர்வு 3 கட்டமாக நடத்தப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
மேலும் http://tiruvannamalai.nic என்ற தளத்தில் student online test என்ற இணைப்பை கிளிக்செய்து பங்கேற்கலாம் என தெரிவித்துள்ளார்.