ஒரு நல்ல நாளின் தொடக்கம் அந்நாளை நாம் ஆரம்பிக்கும் விதத்தில் தான் உள்ளது. அதேபோல் தான் உடலின் ஆரோக்கியம் என்பது அன்றைய நாளில் நாம் முதலில் சாப்பிடுவதை பொருத்து அமையும்.
காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் அல்லது மிதமான சூடுள்ள தண்ணீர் குடித்தால் அது உடலில் உள்ள நச்சுப் பொருட்களை வெளியேற்றி உடலை சுத்தம் செய்து விடும்.
இப்போது வெறும் வயிற்றில் தண்ணீர் மற்றும் அல்லாமல் அவற்றுடன் கலந்து குடிக்கக்கூடிய பொருட்களை பற்றியும் பார்க்கலாம்.
ஓமம் கலந்த நீர்
ஒரு டீஸ்பூன் ஓமத்தை தண்ணீரில் கலந்து கொதிக்க வைத்து, இரவு முழுவதும் ஓற வைத்து காலை எழுந்ததும் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.
இதை குடிப்பதால் உடலில் உள்ள செரிமான பிரச்சனைகள் சரி செய்யக்கூடியது. மேலும், மாதவிடாய் காலங்களில் ஏற்படக்கூடிய வலியை போக்கும்.
சீரகம் கலந்த நீர்
ஒரு டம்ளர் நீரில் சீரகத்தை போட்டு இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும். காலையில் எழுந்து அந்த நீரை வடிகட்டி குடிக்க வேண்டும்.
இந்த நீர் அனைவருக்கும் மிக நல்லது. ஏனென்றால், இது குடிப்பதால் எந்த ஒரு பக்கவிளைவுகளும் ஏற்படாது.
கொத்தமல்லி விதை கலந்த நீர்
ஒரு டீஸ்பூன் கொத்தமல்லி விதை ஒரு டம்ளர் தண்ணீரில் கலந்து, இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும். இது உயர் இரத்த அழுத்தத்தை கட்டுபடுத்த மிகவும் உதவும்.
அருகம்புல் தண்ணீர்
ஒரு டீஸ்பூன் அருகம்புல் பொடியை நீரில் கலந்தோ அல்லது ஒரு டம்ளர் அருகம்புல் ஜூஸோ வெறும் வயிற்றில் குடிக்கலாம். இதை குடிப்பதால் உடலில் உள்ள நச்சுப்பொருட்கள் வெளியேற்றி, கல்லீரல் செயல்பாட்டை மேம்படுத்தும்.
உருளைக்கிழங்கு நீர்
சில உருளைக்கிழங்கு துண்டுகளை ஒரு டம்ளர் நீரில் இரவு முழுவதும் ஊற வைத்து காலையில் வெறும் வயிற்றில் குடிக்க, உடலில் ஆற்றல் அதிகரிக்கும்.