அமெரிக்கா, இத்தாலி உட்பட பல நாடுகளில் வெகுவாக குறைந்த கொரோனா பலி!!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கமானது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த வைரஸின் பரவல் சீனாவில் உள்ள யூகான் நகரில் துவங்கிய நிலையில், இந்த வைரஸிற்கு இன்று வரை உலக நாடுகள் பெரும் இழப்பை சந்தித்துள்ளது.

இந்த வைரசை கட்டுக்குள் வைக்க தடுப்பு மருந்து கண்டறியும் பணிகளில் உலக நாடுகளே சேர்ந்து பணியாற்றி வரும் நிலையில், உலகளாவிய 210 நாடுகளில் சுமார் 2,995,043 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 207,000 பேர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக பலியாகியுள்ளனர். மேலும், 878,972 பேர் சிகிச்சை முடிந்து பூரண நலன் பெற்று இல்லங்களுக்கு திரும்பியுள்ளனர்.

அமெரிக்காவில் 987,160 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நேற்று ஒரேநாளில் 1,157 பேர் பலியாகி, மொத்த பலி எண்ணிக்கை 55,413 ஆக உயர்ந்துள்ளது. மேலும், நீண்ட நாட்களுக்கு பின்னர் அங்கு பலி எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்பெயின் நாட்டில் 226,629 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நேற்று ஒரேநாளில் 388 பலியாகினர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 23,190 ஆக உயர்ந்துள்ளது. இத்தாலி நாட்டில் 197,675 பேர் பாதிக்கப்பட்டு, நேற்று ஒரேநாளில் 260 பேர் பலியான நிலையில், மொத்த பலி எண்ணிக்கை 26,644 ஆக உயர்ந்துள்ளது.

பிரான்ஸ் நாட்டில் 162,100 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நேற்று ஒரேநாளில் 242 பேர் உயிரிழந்து, மொத்த பலி எண்ணிக்கை 22,856 ஆக உயர்ந்துள்ளது. ஐக்கிய ஐரோப்பிய நாடுகளில் 152,840 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று 413 பேர் பலியான நிலையில், மொத்த பலி எண்ணிக்கை 20,732 ஆக உயர்ந்துள்ளது.