89 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை.. 3 பிணையக்கைதிகள் மீட்பு..

ஆப்பிரிக்க நாட்டில் உள்ள நைஜீரியாவில் போகோஹராம் மற்றும் ஐ.எஸ் பயங்கரவாதிகளின் ஆதிக்கமானது அதிகரித்துள்ளது. இவர்களின் ஆதரவோடு பல்வேறு பயங்கரவாத குழுவினர் பல தாக்குதலை மேற்கொண்டு வருகின்றனர்.

இவர்கள் அப்பாவி பொதுமக்களையும், பாதுகாப்பு படையினரையும் குறிவைத்து தாக்குதல் மேற்கொண்டு வரும் நிலையில், பாதுகாப்பு படையினர் சார்பாக தக்க பதிலடியும் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், அங்குள்ள சப்பாரா மாகாணத்தில் இருக்கும் சூரமி பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக இராணுவத்திற்கு தகவல் கிடைக்கவே, சம்பவ இடத்திற்கு விரைந்த பாதுகாப்பு படையினர் அதிரடி தேடுதல் வேட்டையை அழைத்துள்ளனர்.

இந்த வேட்டையில் சுமார் 89 பயங்கரவாதிகள் சுட்டு கொலை செய்யப்பட்ட நிலையில், இவர்களின் பிடியில் இருந்த 3 பெண்களை மீட்டுள்ளனர். மேலும், 322 மாடுகள், இருசக்கர வாகனங்கள், 9 அலைபேசிகள், ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் பாதுகாப்பு படையினருக்கு எவ்வித காயமும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.